கிழக்கிலங்கை நாவிதன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை 7 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 16 ஆம் திகதி தீமிதிப்பு வைபவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
ஆலய உற்சவமானது ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி செவ்வாய்க்கிழமை,புதன்கிழமை,வியாக்கிழமை ஆகிய தினங்களில் அம்மன் ஊர்வலமும்,வெள்ளிக்கிழமை 12 ஆம்திகதி கற்பூரத்திருவிழாவும் அடியார்களுக்கு அருள்வாக்களித்தலும்,13 ஆம்திகதி சனிக்கிழமை குளிர்த்திக்கால் வெட்டுதலும்,14 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை பாற்குடப்பவனி,இரவு முத்துச்சப்பர பவனியும்,15ஆம் திகதி காத்தானைக் கழுவில்வைத்தல்,அம்மன் தவநிலை போன்ற நிகழ்வுகளும்,16 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ மிதிப்பும் இடம்பெற இருப்பதுடன் ஆலயக் கிரியைகளை தேவி பூஜானந்தர் சிவஸ்ரீ தர்ம சுதந்திரன் குருக்கள் மற்றும்; சக்தி வெ. தர்மலிங்கம் பூசகர் ஆகியோரால் மேற்கொள்ளப்படும்.