நிந்தவூரில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இச்சம்பவம் இன்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நிந்தவூரில் உள்ள இராணுவ முகாமுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று இரவு 10.35 மணியளவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
நிந்தவூர் 5 ம் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்து விற்பனைக்காக இந்த ஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருக்கும் போது குறித்த நபர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நிந்தவூரில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழித்துக் கட்டும் நோக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டை இப்பிரதேச மக்கள் மட்டுமன்றி பொதுநல அமைப்புகளும் பாராட்டியுள்ளனர்.
அத்துடன் போதைப்பொருள் வியாபாரிகளை இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மடக்கிப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த நிந்தவூர் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஆதரவை வழங்குவதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Related posts