நிலக்கடலை விதைகள் உற்பத்தி வலயத்தை அமுல்படுத்தும்; – அறுவடை விழா 

 

மட்/விவசாயத்திணைக்களம் (விரிவாக்கம்) மற்றும் மட்/வடக்கு விவசாய உற்பத்தியாளர்கள் , விதை மற்றும் நடுகை பொருட்கள்  உற்பத்தி பண்ணை கரடியனாறு.  சம்மேளன  உறுப்பினர்கள்  இணைந்து  சிபாரிசு செய்யப்பட்ட நிலக்கடலை விதையை உற்பத்தி  செய்யப்பட்டு அறுவடைசெய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் சித்தாண்டி பிரிவு  விவசாய போதனாசிரியர்  செ.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

சித்தாண்டி பகுதியிலுள்ள  சந்தனமடு ஆறு பகுதியில் 500 ஏக்கருக்கு  மேற்பட்ட மேட்டும்நிலம் மற்றும்  கால போக வயல்களில் குறைந்த நீர்பாசனத்தில் நிலக்கடலை, கெளபி போன்ற சிபாரிசு செய்யப்பட்ட விதைகள் உற்பத்தியை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் தரமான விதைகள் விவசாயிகளுக்கு உரிய காலத்திலும்,மாகாண விதை தேவை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன்  இந்த விதை உற்பத்தி வலயத்தை மட்டக்களப்பு விவசாய விரிவாக்க தினணக்களம்  PSDG 2018
ஆண்டு திட்டத்தின் ஊடாக ஆரம்ப கட்ட நிகழ்வாக சுமார்  5 ஏக்கருக்கு வயல் நிலங்களில்  சிபாரிசு செய்யப்பட்ட நிலக்கடலை  அறுவடை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில்   மட்டக்களப்பு மாவட்ட  பிரதி விவசாய பணிப்பாளார் ரி.பரமேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர். நிலக்கடலை அறுவடை விழாவானது சந்தனமடு ஆறு  பகுதியில் சம்மேள உறுப்பினர் எம்.நடேஸ் அவர்களின்  காலபோக வயல் நிலத்தில் இந்த அறுவடை நிகழ்வு நடைபெற்றது.

இவ் நிகழ்ச்சியையின் ஏற்பாட்டாளர் விவசாய போதனாசிரியர் சித்தாண்டி  மற்றும் மட்/வடக்கு விவசாய உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகருமான செ.சதாகரன் இந் நிகழ்வை ஒருங்கிணைந்தார். 

Related posts