நூலகத்தை அமைக்க ஜனாதிபதி செயலகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்முனை மாநகரசபை பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை கிராமத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தரமான நூலகத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி செயலகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.குபேரன் தெரிவித்தார்.

2500மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 6000 குடும்பங்கள் வாழும் பெரியநீலாவணையில் நீண்டகாலமாக பொதுநூலகம் இல்லாமல் இருந்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இதுசம்பந்தமாக பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர்கள், பொதுஅமைப்புக்கள் சுட்டிக்காட்டி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டமையாகும்.பத்திரிகைகளின் செய்தியினை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பார்வைக்கு செலுத்தப்பட்டது.இந்தவிடயமாக ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தப்பட்டது.ஜனாதிபதி செயலகம்,ஜனாதிபதி ஊடகப்பிரிவு பெரியநீலாவணையில் பொதுநூலகம் ஒன்றை அமைத்துக்கொடுப்பதற்குரிய நடவடிக்கையை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களிடம் எட்டிவைத்தது.இதற்கான துரித நடவடிக்கையை கல்முனை மாநகரசபை சபை மேயரிடம் ஆளுநர் ரோஹித போகல்லாகம பணித்துள்ளார்.இதன் பிரகாரம் கல்முனை மாநகரசபை அறிந்து, ஆராய்ந்து வருகின்றது.இதனால் பெரியநீலாவணை கிராமத்தில் உள்ள பொதுமக்கள்,மாணவர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நூலகம் அமைப்பதற்கு கரிசனை காட்டிய ஜனாதிபதி செயலகம்,கிழக்கு மாகாண ஆளுநர், ஜனாதிபதி ஊடடகப்பிரிவுக்கும்,பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் பெரியநீலாவணை பொதுமக்கள்,அமைப்புக்களின் பிரதிநிதிகள் நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றார்கள்

Related posts