அம்பாறை மாவட்ட நெற்பயிர்செய்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய பசளை வகைகள் இன்னும் வழங்கப்படாமை காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இம்முறை பெரும் போகத்தை நம்பி விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக பசளைக்கான முன்வரி விண்ணப்பத்தை சமர்ப்பித்த நிலையில் ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பசளை கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதில் கமநல திணைக்களத்தின் ஊடாக சில வட்டவிதானைமார் பயிர் செய்கைக்கு உகந்த பசளையை பெறாது தேவையற்ற மற்றுமொரு பசளையை பெற்று விவசாயிகளுக்கு வழங்க முன்வந்திருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் விவசாயிகளுக்கு அத்தியவசியமாக வழங்க வேண்டிய யூரியா பசளை தமது கையிருப்பில் இல்லை என தெரிவித்து சம்மந்தப்பட்ட தரப்பினர் ஏமாற்றுவதாக தெரிவித்துள்ள விவசாயிகள் உரிய காலத்தில் மேற்படி பசளைகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறாத பட்சத்தில் பெரும் நட்டத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டி உள்ளனர்.
எனவே இவ்விடயம் குறித்து கமநல சேவை நிலையம் மௌனமாக இருந்தால் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.