நேர்மையான சலுகைக்கு சோரம்போகாத ஊடகவியலாளன் மோகனதாஷ் இழப்பு தாங்கமுடியாத வேதனை!
பா.அரியநேத்திரன் மு.பா.உ.

இளம் ஊடகவியலாளர் ஆசியர் நேர்மையான சோரம்போகத ஒரு உணர்வுமிக்க ஊடகவிநலாளர் துறைநீலாவணை மண் ஈன்ற தூய தமிழன் பா.போகனதாஷ் அவர்களின் பிரிவு தாங்கமுடியாத பெரும் இழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் பா.மோகனதாஷ் பிரிவு தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் பல்துறை ஆளுமை கொண்ட ஒரு இளம் ஊடகவியலாளராகவும், ஆசிரியராகவும், கலை இலக்கியவாதிநாகவும் வாழ்ந்து பலரின் மனதை கவர்ந்த ஒருவர்.
 
எனக்கு இவரை பல வருடங்களாக தெரியும் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து அரசியல் சார்ந்த விடயங்களை ஆவலுடன் அறிவதில் பின்நிற்கமாட்டார்.
 
தமிழ்தேசிய அரசியலை உயிர்மூச்சாக நேசித்தவர் எனினும் ஊடகப்பணியில் எல்லா அரசியல் தலைவர்களினதும் செய்திகளையும் நேர்காணல்களையும் தொடர்ந்து எழுதி வந்த நேர்மை எப்போதும் இவர் இடத்தில் இருந்தது.
 
மட்டக்களப்பில் பல ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள் ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே தேடல் மூலமாக தன் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்கிறார்கள் அதில் மோகனதாஷ் முதன்மையானவர் தமது ஆசிரியர் தொழிலை முழுநேர தொழிலாக செய்தாலும் பகுதிநேர ஊடகவியலாளராக பெருமை இன்றி் தான்சார்ந்த சமூகத்திற்கும் மக்களுக்கும் பல உண்மைகளை வெளியில் கொண்டுவரும் தனித்துறமையை நான் இவரிடத்தில் அவதானித்தேன்.
 
சுகவீனகாரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முதல் நாளும் எனது நேர்காணல் ஒன்றை என்னிடம் இருந்து பெற்றார் ஆனால் அது பிரசுரமாவதற்கு முன்னமே இவர் எமைவிட்டு பிரிந்தார்.
 
அன்னாரின் இழப்பு எமது்தமிழ்தேசியத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும் எனவும் மேலும் கூறினார்.

Related posts