காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான பைசர் ரக தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று(21) கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமானது.
காரைதீவுப்பிரதேசத்தில் பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
18-19வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இத்தடுப்பூசிகள் காரைதீவு விபுலாநந்த தேசிய கல்லூரி காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் காலை 8மணிமுதல் மாலை 4மணி வரை ஏற்றப்பட்டுவருகிறது.
நேற்று வியாழக்கிழமை முதற்தடவையாக க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு ஏற்றப்பட்டன. இன்று(22)வெள்ளிக்கிழமை இரண்டாம்தடவையாக தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படவிருக்கின்றன.
இந்த இருதினங்களிலும் ஏற்றத் தவறிய மாணவர்களுக்கு நாளை சனிக்கிழமை(23) காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனையில் ஏற்றப்படவிருக்கிறது.
எனவே குறித்த வயதுக்குட்பட்ட சகல மாணவர்களும் இந்த பைசர் ரக தடுப்பூசியைப் குறித்ததினங்களில் பெற்றுக்கொள்ளுமாறு காரைதீவு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் கேட்டுக்கொண்டுள்ளார்.