பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா முன் ஏற்பாட்டுக்கூட்டம்.

மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனில் இயங்கியவந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் 150பேர் மாத்திரம் தியானம் செய்யக்கூடியதாக கடந்த 50 வருடங்களாக இருந்து வந்தது அதில் விசேடகாலங்களில் பக்தர்கள் அதிகமாக கூடுகின்றபோது இடப்பற்றாக்குறை கானப்பட்டுவந்தது பெரும் குறையாக கானப்பட்டது. இக்குறையினை தீர்க்கும் வகையில் 500 பக்த்தர்களை உள்ளடக்கும் வகையிலான தியான மண்டபத்துடன் பகவான் ஸ்ரீ ராமகிஷ்;ணர் திருக்கோயில் எதிர்வரும் 28 ஒக்டோபர் 2020  அன்று கும்பாபிN~கப் பெருவிழா நடாத்துவதற்கான கூட்டம் இன்று (26) கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மி~னில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.
 
இக்கலந்துரையாடலில் கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் அக்ஷராத்மானந்தர் மற்றும் உதவி மேலாளர் ஸ்ரீமத் நிலமாதவானந்தர் மட்டக்களப்பு மாநகர மேயர் ரீ.சரவணபவண் ஆகியோருடன் இயக்குனர் சபையின் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் திணைக்கள் தலைவர்கள் கலந்து கொண்டு பல தீர்மானங்களை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற கோவிலானது 15 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது இக்கோயிலானது தனியாக ஆஸ்ரமத்தில் உள்ள மாணவர்கள் மாத்திரம் அல்லாது பொதுமக்களின் வருகையையும் அதிகரித்து மக்களையும் ஆஸ்ரமத்துடன் இணைக்கும் செயல்திட்டமாகவே அமைகின்றது.
 
எதிர்வரும் 28 ஒக்டோபர் 2020 கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறவுள்ளது அதற்கு முதல்நாள் 27ம் திகதி ரதங்களின் ஊர்வல பவணி மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் இருந்து மாலை 4.00மணி ஆரம்பித்து கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனை வந்தடையவுள்ளது இவ்ஊர்வலத்தில் பங்குகொள்வதற்கென திருகோணமலை அம்பாறை யாழ்ப்பாணம் கொழும்பு போன்றபகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் அவர்களுக்கான விஷேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் அக் ஷராத்மானந்தர் தெரிவித்தார்.
 
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் திறந்துவைப்பதுடன் பஐனைகள் கும்பாபிஷேகம் ஹோமம் பூiஐபாராயனம் புஷ்பாஞ்சலி ஆரதி பிரசாதம் வழங்கள் அன்னதானம் வீணை இசை விளக்குப் பூiஐ சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளும் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
 
????????????????????????????????????
????????????????????????????????????

Related posts