பகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர் வன்முறை செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை எட்டு மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரையில் இந்த அலுவலகம் திறந்திருக்கும். பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக 24 மணித்தியாலமும் தொலைபேசி ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். இதற்காக தொலைபேசி இலக்கம் 0112 123 700 ஆகும்.