ஜனாதிபதி அவர்களால் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு குவளை பால் வழங்கும் போசனை திட்டம் கிழக்கு மாகாணத்தில் பிரதான நிகழ்வாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைக் கல்விவலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜலால் டீ சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கும்நிகழ்வு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
சம்மாந்துறை கல்விவலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் அவர்களது வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் .கே.சி. முத்து பண்டா , கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ,கல்வி அமைச்சின் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் சுதர்சன , வலயக் கல்வி பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்கள், சம்மாந்துறை வலய பாடசாலை அதிபர்கள் ,பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது இப்பிரதேசத்திற்கு முதற்தடவையாக வருகைதந்த கிழக்குமாகாண ஆளுநர் அவர்களுக்கு நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம் சார்பாக அதிபர் என்.பிரபாகர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் சார்பாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் ,மாகாணக்கல்வித்திணைக்களம் சார்பாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
அத்தோடு இந்த நிகழ்வினைச் சிறப்பாக ஒழுங்குபடுத்திய நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலய அதிபர் பிரபாகர் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிழக்குமாகாண ஆளுநர்பாராட்டுத்தெரிவித்துள்ளார்