பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார். 

இம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படவுள்ளனர். கடந்த ஆண்டை விட ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். 

2018ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார். 

விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும். இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று முதல் தொடக்கம் முகவர் புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related posts