பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ஒரு மாத்திரை கோவிட் தடுப்பூசி மட்டும் வழங்கப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Asela Gunawardena) இந்த விடயத்தை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த ஒரு மாத்திரை போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
18 மற்றும் 19ம் வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.