பாண்டிருப்பு தீமிதிப்பு வைபவம் வழமைபோன்று இடம்பெறவேண்டு;ம்! இன்று கல்முனை மேல்நீதிமன்றம் உத்தரவு.

காரைதீவு  நிருபர் சகா
 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மனாலய தீமிதிப்பு வைபவம் வழமைப்பிரகாரம் நடாத்தப்படுவது போன்று இம்முறையும் இடம்பெறவேண்டும்.
இவ்வாறுகூறும் உத்தரவை (10)வியாழக்கிழமை கல்முனை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 
பாண்டிருப்பு திரௌபதைஅம்மனாலய தீமிதிப்பு மஹோற்சவம் தற்போது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இறுதிநாள் தீமிதிப்புத்திருவிழா பூசை தொடர்பில் குறித்த சமுகம் உரிமைகோரி நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தது.
 
அவ்வழக்கு கடந்த ஆறாம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்தஇறுதிநாள்பூசை தொடர்பில் வேறுயாரும் தலையிடமுடியாது என இடைக்காலதடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்த ஆலயநிருவாகத்தாலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த இறுதிநாள்தீமிதிப்பு பூஜை பொதுப்பூஜையாக ஆலயநிருவாகத்தால் நடாத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த வழக்கு (10) வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இன்போதே நீதிபதிமேற்கண்ட உத்தரவை அதாவது வழமைப்பிரகாரம் தீமிதிப்பு வைபவம் நடைபெறவேண்டும். அனைவரும் இதற்கு ஒத்துழைக்கவேண்டும்.முன்பு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு நீக்கப்படுகிறதெனவும்  உற்சவம் முடிந்த பிற்பாடு வழக்கு ஆராயப்படும் என்றும் தெரிவித்தர்h.
 
அதன்படி (11) வெள்ளிக்கிழமை மாலை வழமைபோன்று பொதுப்பூஜையாக ஆலயநிருவாகத்தால் தீமிதிப்புவைபவம் இடம்பெறும்.

Related posts