பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
என்.டி.ஐ. வொஷின்டன் பெண் பிரதிநிதிகள் இன்று 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பாசிக்குடா அனாந்தையா விடுதியில் பெண்களது முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் பேசுகையில் கடந்த யுத்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 34 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் அத்தோடு கணவனை இழந்து விதவைகளாக 19 ஆயிரம் பேர் வாழ்கின்றனர் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்யவேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்தார்
இச்சந்திப்பில் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் சரியானமுறையில் பேணப்படுவதுதொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இந்தக் கலந்துரையாடல் இலங்கைக்கான இணைப்பாளர் ருசிட்டா பலப்பிட்டிய அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.