கொரொனா நோய்ப்பரவலினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இந்து ஆலயங்கள் வழங்கிவருகின்றது.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்பு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினால் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட எட்டு கிராமங்களில் ஊடரங்கினால் எதுவித வருமானமும் இல்லாத நிலையில் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கிவரும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இந்த நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை ஆலய வண்ணக்குமார் தலைமையில் மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நடைபெற்றது.
ஆலயத்தின் நிர்வாகத்தினர்,ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள்,பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.ஹிசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட எட்டு கிராமங்களில் உள்ள 350 பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் ஆலயத்தினால் வழங்கப்பட்டன.