பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு வாழ்க்கைச் செலவு குழு , நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பரிந்துரைத்துள்ளதாக தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதன்படி , 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும் , ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் ஒரு மெட்றிக் தொன் பால் மாவின் விலை 3 ஆயிரத்து 250 முதல் 3 ஆயிரத்து 350 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
அதன்விலை, எதிர்வரும் காலத்தில் 3 ஆயிரத்து 400 முதல் 3 ஆயிரத்து 500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கடந்த தினத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.