பிரசித்திபெற்ற வெருகல் முருகனாலய கொடியேற்ற உற்சவம்!

 

வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று திங்களன்று 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய மஹோற்சவத்தையொட்டி கடந்த 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய பாதயாத்திரை 08தினங்கள் தொடர்ச்சியாக பயணித்து நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை வெருகலம்பதியைச் சென்றடைந்தது.

பாதயாத்திரையில் சுமார் 50பேரளவில் பயணித்துள்ளனர்.அவர்கள் கடந்த 8 தினங்களில் தரிசித்த ஆலயங்கள்தோறும் பஜனை பாடி சிரமதானம் செய்து பாதயாத்திரையை மேற்கொண்டுவந்தார்கள்.

நேற்று முன்தினம் (8) சனிக்கிழமை கதிரவெளி ஸ்ரீ திருச்செந்தூர் முருகனாலயத்தில் தங்கி நேற்று (9) காலை வெருகலம்பதியைச் சென்றடைவர்.

காரைதீவிலிருந்து வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான பாதயாத்திரையை வழமைபோல் இம்முறையும் காரைதீவு ஸ்ரீ நந்தவனப் பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts