பிரசித்தி பெற்ற கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 198 வது கொடியேற்று விழா : அலைகடலென மக்கள் பங்கெடுப்பு !!

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 198 வது வருட புனித கொடியேற்று விழா சனிக்கிழமை  ( 25) மாலை  கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் இடம்பெற்றது.
 
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது பக்கீர் ஜமாஅத்தினர், உலமாக்கள், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், தேசிய காங்கிரசின் பிரதித்தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.ஏ.ஜவாத், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், படை அதிகாரிகள் , உலமாக்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், ஏராளமான பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 
 
இவ் கொடியேற்றமானது 12 நாட்கள் நடைபெறுவதோடு இதில் புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு எதிர்வரும் பெப்ரவரி (06) கொடியிறக்கு தினமான அன்று  மாபெரும் கந்தூரி  அன்னதானம் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது

Related posts