ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாளை (16) பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.