காரைதீவு பிரதேச வைத்தியசாலை முப்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் இடையே காணப்படும் தொற்றா நோய்களை இனம் காண்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிகின்றது.
இனங்காணப்பட்ட தொற்றா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் தலைமையிலான குழுவினர் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள்.
உலகவங்கி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த தொற்றா நோய் இனம் காண்பதற்கான வேலைத்திட்டம் நேற்றையதினம் காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது.
அங்கு பிரேதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பரிசோதனை செய்யப் பட்டார்கள் .
இவ்வாறாக வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக பாடசாலைகள் ஏனைய பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிற