எஸ்.சபேசன்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் ஒன்பதாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் பொங்கல் விழா- 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதித் தலைவர் காளிக்குட்டி தியாகராசா தலைமையில் சுவிஸ் உதயம் அமைப்பின் அங்கத்தவர்களின் ஒழுங்கமைப்பிலும் சுவிஸ் நாட்டின் Treffpunkt wittig kofen jupiters trasse 15 ,3015 B இல் நடைபெற்றது.
தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவ்விழாவிற்கு சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் அலோசியஜின் மின்னல் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது அத்தோடு சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டிருந்தது .
இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்ககத்தின் பொருளாளரும் சமூகசேவகருமான க.துரைநாயகம் அவர்கள் உரையாற்றுகையில் இவ்விழாவானது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக நடாத்தப்பட்டுவருவதுடன் எமது அமைப்பானது பலவருடகாலமாக இவ்விழாவினை சிறப்பாக நடாத்திவருகின்றோம்.
அதே வேளை இன்றைய நாளில் அறுசுவை உணவினை சமைக்க உதவிய பேரின்பராசா வாணு மற்றும் காளிக்குட்டித் தியாகராச ஆகியோருக்கும் மற்றும் இளையராகங்கள் அலோசியஜின் மின்னல் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி நடாத்திய அலோசியசிக்கும் பாராட்டுத்தெரிவிக்கின்றேன் என்றார்.
இந்நிகழ்வுக்கு உதவிய அனைவருக்கும் செயலாளர் அம்பலவானர் ராஜன் அவர்கள் நன்றிதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது