பிறந்து 28நாட்களில் குழந்தைகளை பாதிக்கும் “மிஸ் என் “தொற்று!ஆபத்து என்கிறார் விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் விஜி திருக்குமார்

சிறுவர்களில் கொரனா தொற்றுக்கு பின்னர் ஏற்படுகின்ற Mis-C பற்றி முன்னர் பார்த்தோம்.Mis C யானது சிறுவர்களின் பல அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதை போன்றே Mis- N பிறந்து 28 நாட்களுக்குள்ளான பிள்ளைகளின் பல அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஆபத்தானது.
 
என்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும்,மட்/போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான வைத்தியகலாநிதி வைத்தியர் .விஜி திருக்குமார் தெரிவித்தார்.
 
சமகாலத்தில் குழந்தைகளைப்பாதிக்கும் “மிஸ்சி “பற்றி அறிந்துகொள்வதற்கிடையில், “மிஸ்என்” என்ற புதியவகைத்தொற்றும்  தாக்கம் செலுத்தஆரம்பித்துள்ளதாக இறுதியாகவந்த மருத்துவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிவைத்தியநிபுணரிடன் கேட்டபோது அவர் கூறியவை அது.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்:
MIS – N (Neonatal Multisystem Inflammatory Syndrome) என்பது அதன் விரிவாக்கம்..
 
COVID – 19 தொற்றுக்கு உள்ளான தாயின் தொப்புள் கொடியின் மூலமாக கடத்தப்படுகின்ற பிறபொருள் எதிரி அல்லது நிணநீர் தொழிற்பாட்டின் பிறழ்வு செயற்பாடு சிறு பிள்ளைகளின் உடலின் பல அங்கங்களில் பிறந்து 28 நாட்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
இதன் மூலமாக பிள்ளைகளின்
.இதயம் பெரும்பாலான (90%) தாக்கத்தை (இதய தொழிற்பாடுஇதய குழாய்கள்) ஏற்படுத்துகிறது..நுரையீரல்  சுவாசப் பிரச்சனைகள்.காய்ச்சல்.பாலூட்டலில் சிரமம்.சிறுநீரக செயலிலப்புகல்லீரல் பிரச்சனைகள்பிள்ளை சோர்வாக காணப்படல்பிள்ளை மஞ்சளாகி காணப்படல்போன்றவற்றை அவதானிக்க முடிவதுடன் சிறு வீதமானவர்களில் உயிரிழப்பும் அவதானிக்கப்படுகிறது.
 
சிறு பிள்ளைகளில் குறிப்பாக 28 நாட்களுக்கு உட்பட்டவர்களின் உடல் நிலையில் மேலதிக கவனம் எடுத்து பார்ப்பதுடன் பிள்ளைகளின் உடல் நிலையில் ஏதேனும் அசௌகரியத்தை அவதானித்தால் உடனடியாக அரச வைத்தியசாலைகளை அணுகின்ற வேளையில் விசேட வைத்தியர்கள் காணப்படுகின்ற வைத்தியசாலைகளுக்கு உங்களை சிகிச்சைகளுக்கா அணுப்பிவைப்பார்கள்.இவற்றுக்கான உரிய சிகிச்சைகள் காணப்படுகின்றன அவற்றை வைத்தியர்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.
 
 

Related posts