புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 29 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், 29 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
விபரம்:1) பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன் விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சu
;2) ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்
.3) காமினி ஜயவிக்ரம பெரேரா – புத்தசாசனம் மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர்
.4) மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்.
5) லக்ஸ்மன் கிரிஎல்ல – அரச முயற்சியான்மை, மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
.6) ரவூப் ஹக்கீம் – நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்
7) திலக் மாரப்பன – வௌிவிவகார அமைச்சர்.
8) ராஜித்த சேனாரத்ன – சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்.
9) ரவி கருணாநாயக்க – மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்.
10) வஜிர அபேவர்தன – உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர்.
1) ரிஷாட் பதியூதீன் – கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளோரை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்.
12) சம்பிக்க ரணவக்க – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்.
13) பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக நவீன் திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
14) விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் அமைச்சராக பி.ஹரிசன் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்
15) கபீர் ஹாசீம் – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர்.
16) ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாகம், இடர்முகாமைத்துவ அமைச்சர்.
17) கயந்த கருணாதிலக்க – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்.
18) சஜித் பிரேமதாச – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர்.
19) அர்ஜூன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர்.
20) பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்.
21) சந்திராணி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் வரண்ட வலய அபிவிருத்தி அமைச்சர்.
22) தலதா அதுகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்.
23) அகில விராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்.
24) அப்துல் ஹலீம் – தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர்.
25) சாகல ரத்னாயக்க – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்.
26) ஹரின் பெர்னாண்டோ – தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
.27) மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழி, சமூக முன்னேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சர்
.28) தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்.
29) மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சர்.