கோட்டாபய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் என கருணா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,
நான் வாக்களிக்கச் சென்ற பின்னர் தெரிவித்திருந்தேன், 52 வீதம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவுசெய்யப்படுவார் என்று. அதேபோன்று தற்போது நடந்துள்ளது.
அதனைவிடக் கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வடகிழக்கு தமிழ் மக்கள் சிறந்த வாய்ப்பினை இழந்திருக்கின்றார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயமாக வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றி மக்களை திசை திருப்பி வாக்குகளை சிதறடித்துள்ளனர்.
தமிழ் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களித்திருந்தால் நாங்கள் உரிமையுடன் எங்களது விடயங்களைக் கேட்டு சாதிப்பதற்கான நிலையிருந்திருக்கும்.
மஹிந்த ராஜபக்ஷவே பிரதமராக வரவிருக்கின்றார். பாரட்சமற்ற வகையில் விடயங்களை செய்வார்.