புதிய ஜேர்ஸி அறிமுக கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மைட்டி வோரியஸ் அணி சம்பியன்

சவளக்கடை 6ஆம் கொளனி மைட்டி வோரியஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய அங்கி அறிமுக சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி 6ஆம் கொளனி அல்-தாஜூன் பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
 
20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11பேர் கொண்ட இச் சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி சாய்ந்தமருது ஒஸ்மானியா விளையாட்டுக் கழகத்திற்கும், 6ஆம் கொளனி மைட்டி வோரியஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையிலான சினேகபூர்வ அங்கி அறிமுக கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 6ஆம் கொளனி மைட்டி வோரியஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.
 
நாணையச் சூழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது ஒஸ்மானியா விளையாட்டுக் கழகம் 6ஆம் கொளனி மைட்டி வோரியஸ் விளையாட்டுக் கழகத்தினை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. 
 
முதலில் துடுப்பெடுத்தாடிய 6ஆம் கொளனி மைட்டி வோரியஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஒஸ்மானியா விளையாட்டுக் கழகம் 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 154 ஒட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது.
 
இந்நிகழ்வு மைட்டி வோரியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எச்.எம்.கபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர், சாய்ந்தமருது சிங்கர் சோ றூம் உரிமையாளர் எஸ்.எச்.ஜிப்ரி, 6ஆம் கொளனி சனா றைஸ் மில் உரிமையாளர் யூ.எல்.பாறூக், மைட்டி வோரியஸ் விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவிப்பளர் ஏ.எம்.ஜனீஸ், றோயல் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம்.வசீர் உள்ளிட்ட  முக்கிஸ்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts