மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான இளம் குடும்பஸ்தர் யோகேஸ்வரன் அமல்ராஜ் (36) தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று புதிய ஆண்டு ஆரம்பித்துள்ளமையால் அவரின் மனைவி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபாட்டிற்கு போவதற்கு அழைத்த போது தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு தனது படுக்கை அறையில் நித்திரைசெய்து கொண்டிருந் ததாகவும் பின்னர் ;அவரின் மகைவி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து விட்டு வீடு திரும்பிய போது அவரின் படுக்கை அறையில் தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையில் அறியமுடிந்தது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.