ஏப்ரல் 21 ஈஸ்டர் தின வன்கொலைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் ஒரு வருடம் நிறைவு. பல்வேறு ஆலயங்கள், அமைப்புகள் இவ் ஓராண்டு அஞ்சலி நிகழ்வினை மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டித்து வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு அனுஸ்டிப்பு நிகழ்வுகள் இன்று காலை முதல் நடைபெற்று வந்தன. அந்த வகையில் புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டிலும் மேற்படி அனுஸ்டிப்பு நிகழ்வு கொரோணா பாதிப்பு தொடர்பான விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிக எளிமையாக கழகத்தின் தலைவர் தி.சில்வயன் தலைமையில் 21 மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன், புளியந்தீவு சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த ஏப்ரல் 21 தாக்குதலில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயர்நீத்த உறவுகள் 31 பேரின் நினைவாக 31 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, விசேட இறைவணக்கம் செலுத்தப்பட்டு இவ்அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.