பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதற்கு பெண்கள் அமைப்புக்களின் ஒத்துளைப்பு மிக அவசியம். அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள்.
சமுகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதற்கும், அதர்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பெண்கள் அமைப்புக்களின் ஒத்துளைப்புக்கள் மிக அவசியம். இவ்வாறான பெண்கள் அமைப்புக்கள் பூரண ஒத்துளைப்பினை வழங்குவனூடாகவே அரச அதிகாரிகள் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க ஏதுவாக அமையும் என அரசாங்க அதிபர் கருணாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவனின் ஏற்பாட்டில் பெண்கள் தொர்பான விடயங்களில் கவனஞ்செலுத்தும் பெண்கள் அமைப்புக்களின் பங்குபற்றுதலுன் “நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் பெருவிமர்சையாக இன்று (08) பிரதேச செயலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதன்போது பிரதம அதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அரசாங்க அதிபர் கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் செயற்பட்டுவரும் பெண்கள் அமைப்புகளான காவியா, அருவி, நியூ அரோ, சூரியா, எஸ்கோ, மகளிர் அபிவிருத்தி ஒன்றியம், உளநல மையம், மகளிர் மகா சங்கம் மற்றும் மாவட்ட மகளிர் சம்மேளனம் என்பன இணைந்து இம்மகளிர் தின கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது மகளிரின் துவிச்சக்கர சவாரி, பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும், விழிப்பூட்டல் ஊர்வலம் மற்றும் துண்டுப் பிரசுர விநியோகம் உட்பட அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.
இதுதவிர நன்வெமு ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்திலான தையல் இயந்திரம் மற்றும் நியூ அரோ பெண்கள் அமைப்பினால் பெண்களின் பொருளாதார மேம்பாடு எனும் செயற்றிட்டத்திலான தையல் இயந்திரம் என்பன பயனாளிகளுக்கு இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர்களான கே. அருணன், திருமதி. லக்ஷன்யா பிரசாந், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. பிரணவஜோதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சுதர்சன், மாவட்ட சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ், சமுர்த்தி முகாமையாளர் சத்தியசீலன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.பீ. றஸ்மினா உட்பட பெண்கள் அமைப்புக்களின் தலைவிகள், உறுப்பினர்கள், பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள், பெண் தொழில் முயற்சியாளர்கள்என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.