பெரியநீலாவணை நாற்சந்தி வடிகால் மூடி தாழிறங்கியுள்ளதாக பொதுமக்கள்,பாதசாரிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலை வீதியில் உள்ள வடிகால் மூடி தாழிறங்கியுள்ளதாக பொதுமக்கள்,பாதசாரிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பகுதியான மருதமுனை-பெரியநீலாவணை எல்லைப்பகுதியில் காணப்படும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குரித்தான வடிகாலில் மேற்பகுதியில் வாடிகால் மூடி சிதைவடைந்து தாழிறங்கியுள்ளது.
மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலை வீதியின் துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பாதையின் தொடக்கத்திலே வடிகால்மூடி இரண்டு வாரங்களாக இவ்வாறு சிதைவடைந்து தாழ் இறங்கி காணப்படுகின்றது.
இதனால் பொதுமக்களும்,பாதசாரிகளும் மிகுந்த அசௌரியங்களுக்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றார்கள்.இவ்வீதியா
இவ்வாறு சிதைவடைந்து தாழிறங்கியுள்ள வடிகால் மூடியை கல்முனை மாநகரசபை முதல்வர்,கல்முனை பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர்,அம்பாறை மாவட்ட உயரதிகாரிகள் இணைந்து கவனத்தில் எடுத்து வடிகால் மூடியைத் போட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.