பெரும்பான்மை இனத்தவர்களால் 1980 ஆம் ஆண்டு அத்துமீறி பிடிக்கப்பட்டு இருக்கின்ற சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட தொட்டாசுருங்கி கண்டத்தில் அமந்துள்ள 164 ஏக்கர் வயல் காணிகளை மீளம் பெற்றுக்கொள்ள தமழி;த்தலைவர்கள் உதவிசெய்யவேண்டும் என காணிச் சொந்தக்காரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
இவர்கள் மேலும் தெரிவிக்கையில்
மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை-02 கிராம உத்தியோத்தர் பிரிவில் அமைந்துள்ள தொட்டாசுருங்கி கண்டத்தில் சொந்தமான 164 ஏக்கர் ( L.D.Oஉத்தரவு பத்தர) வயல் காணிகளை அத்துமீறி பிடித்து அதில் வேளாண்மை செய்து கொண்டு வருகின்றார்கள்.
எமது காணிகளை அத்துமீறி பிடித்தவர்களுக்கு எதிராக 1983ல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு அவ்வழக்கில் காணிசொந்தகாரர்கள் சிலருக்கு குறித்த காணிகளை உரியவர்களுக்கு மீள வழங்கும்படி நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது ஆனால் அக்காலத்தில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தமுடியாமல் போய்விட்டது.
இக்காணிகளை இழந்த நாங்கள் கடந்த 1990ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாத யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அகதிமுகாமில் வாழ்ந்து மீள குடியமர்த்தப்பட்டோம். 2007ம் ஆண்டு பயங்கரவாத யுத்தமுடிவுக்கு வந்த பின்னர் காணி சீர்திருத்த ஆணைக்குழு மூலமாக கடந்த 2015.08.27ம் திகதி இக் காணி சம்பந்தமான விசாரணை நடைபெற்றது.
அதன் பின்னர் ஜனாதிபதி பிரதம மந்திரி காணி அமைச்சர் காணி ஆணைக்குழு காணி ஆணையாளர் லஞ்ச ஊழல் ஆணைக்குழு நல்லிணக்க ஆணைக்குழு மீள்குடியேற்ற அமைச்சர் எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களுக்கு முறைப்பாடு செய்தோம் அதன் பின்னர் அம்பாறை மாவட்டசெயலாளரின் தலைமையில் மாவட்ட காணி ஆணையாளர் சம்மாந்துறை பிரதேச செயலாளர் காணி நிர்வாக உத்தியோகத்தர்கள் கிழக்குமாகாணசபை சபை உறுப்பினர்கள் காணியை இழந்த தமிழர்கள் காணியை அத்து மீறி பிடித்த சிங்களவர்கள் எல்லோரையும் அழைத்து கடந்த 2016.11.04 திகதி மாவட்டசெயலகத்தில் கூட்டம் நடாத்தி காணி உத்தரவுப்பத்திர சொந்தகாரர்களுக்கு காணிகளை மீள வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
புpன்னர் 2076.11.10 ஆம் 14 ஆம் ஆகிய இரு தினங்களில் எமது காணிகளுக்காண L.D.O உத்தரவுப் பத்திரங்கள் யாவும் பரீசீலிக்கப்பட்டு அதன் பின்னர் எமது காணிகள் அமைந்துள்ள தொட்டாசுருங்கி கண்டத்திற்கு சென்று களப்பரிசோதனை செய்து பின்னர் மல்வத்தை கமநல சேவை நிலையத்தில் தொட்டாசுருங்கி கண்ட காணியின் பதிவு தொடர்பான பெயர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு குறித்த காணி தமிழர்களின் காணிகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் எமது காணிகளை எமக்கு தர பெரும்பான்மை இனத்தவர்களும் அரச மேலதிகாரிகளும் மறுத்து வருகின்றார்கள்.
மேலும் எமது காணிகளை அத்துமீறி பிடித்து வேளாண்மை செய்கின்றவர்களிடம் எந்த விதமான உத்தரவுபத்திரங்களும் வழங்கப்படவில்லை அவர்களுக்கு கொளனி திட்டத்தில் மூலம் குடியிருப்பு காணிகளும் குடியிருக்கும் வீடும் அரசினால் வழங்கப்பட்டுள்ளது அதற்கு மேலதிகமாக எமது காணிகளை அத்துமீறி பிடித்து பாதுகாப்பு படையின் உதவியுடனும் வேளாண்மை செய்து வருகின்றார்கள்.
காணிகளை இழந்த எமது மக்களுக்கு வேறு எங்காவது நெற்செய்கை காணி உள்ளதா என அறிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடமை புரியும் கிராம உத்தியோகத்தர் மூலமாக ஒரு இரகசிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் பின் கடந்த 2017.03.31 ஆம் 2017.04.04 ஆம் ஆகிய இரு தினங்களில் மாவட்ட காணி ஆணையாளரால் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து விசாரணை நடாத்தி அம்மக்களுக்கு நெற்செய்கை காணிகள் ஏதும் இல்லை என இனம் காணப்பட்டள்ளது.
மேலும் எமது காணி சம்பந்தமான விசாரணைகள் முடிவடைந்த போதிலும் பெரும்பான்மை இன மக்களுக்குச் சார்பான அரசியல் வாதிகளின் அழுத்தத்தினால் அதற்குரிய தீர்வினை வழங்குவதற்கு மாவட்டசெயலாளர் கடந்த இரண்டு வருடமாக இழுத்தடித்து செய்து வருகின்றார்.
எனவே நல்லாட்சியை நம்பி இருக்கும் எமது தமிழ் மக்களுக்கு நிதி கிடைக்க வேண்டி இப்பிரச்சனையை தாங்கள் நேரடியாக தலையீடு செய்து இரு இனங்களுக்குள் ஏற்பட்டுள்ள இன முறுகளை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை மீள வழங்கி நியாயமான தீர்வினை பெற்று இந்த நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளும் முன் வரவேண்டும் என பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்