இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திால் விநியோகிக்கப்படுகின்ற அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை டீசலொன்றுக்கு 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 140 ரூபாவில் இருந்து 135 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 164 ரூபாவில் இருந்து 159 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 111 ரூபாவில் இருந்து 106 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 141 ரூபாவில் இருந்து 136 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த விலைக்குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.