நான் கடந்த 8 ஆண்டுகளாக கூறிவந்த விடயத்தை தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் போச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (11) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு அரசடியில் அவரது கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களான செல்லத்தம்பி-மேகரெத்தினம்,நடரா
அபிவிருத்தி என்றால் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரம்தான் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள்.வருடாந்தம் தீபாவளிக்குள் தீர்வு வந்துவிடும்,வந்துவிடும் என கூறியவர்கள் இன்னும் எமது மக்கள் தீர்வைக் காணவில்லை.அரசியல் தொடரச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றது மாறாக எமது மக்களின் தேவைகள், உரிமைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
இந்நிலையில்தான் உதயசூரியன் பல வருடங்களுக்குப் பின்னர் இம்முறை மட்டக்களப்பில் மீண்டும் உரிக்கும் என்பதில் மாற்றமில்லை.மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள்.அந்த மாற்றத்தின் அடையாளமாக நாங்கள் திகழ்வோம். அதற்கான வழிவகைகளை முன்வைக்கவுள்ளோம்.எமது தேர்தல் விஞ்ஞாபனம் மிகவிரைவில் வெளியிடுவோம்.
யுத்தம் முடிவுற்று கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு மாற்று அரசியல் இல்லாமலுள்ளது. இங்குள்ள ஊடகவியலாளர் வேட்பாளர்களை அழைத்து மக்கள் முன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.இந்த அழைப்பை அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.