பேருந்து கட்டணங்களை குறைக்காத பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.
அதற்கமைய கட்டணங்களை குறைக்காத பேருந்துகள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு பொதுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டது.
எனினும், சில பேருந்து உரிமையாளர்களை கட்டணங்களை குறைக்காத நிலையில், அது தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது