கல்முனை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சேவைப்பிரிவு என்பனவற்றின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் விபத்து சேவைப்பிரிவுகளின் நேர காலங்கள், இடங்கள் என்பன மாற்றப்பட்டுள்ளன.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் குறித்த அறிவித்தலை பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த அறிவித்தலில் வெளி நோயாளர் பிரிவு (OPD) விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் (A&E) சேவை நேர ஒழுங்கு பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளர்களை விடுதிக்கு அனுமதிக்கும் செயற்பாடு கல்முனை யாட் வீதியில் உள்ள புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் (A&E ) தொடர்ந்து இயங்கி வருகின்றது.
அதேவேளை வெளி நோயாளர் பிரிவின் (OPD) சேவை நேர ஒழுங்கு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
திங்கள் -வெள்ளி கிழமைகளில் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையும்,
சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரையும்,
ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 8.00 மணி – மாலை 2.00 மணி வரையும்நடைபெறுகின்றது.
விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவு (A&E) இயங்கும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.