பொதுமுடக்கம் காரணமாக கிளினிக் மருந்துகள் தபாலகமூடாக விநியோகம் ! மருந்தகங்கள் திறந்துள்ளன !!


நூருல் ஹுதா உமர்

நாட்டில் நேற்றிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது. இதனால் நீண்டகால நோய்வாய்ப்பட்டோர், கிளினிக் மூலம் மருந்துகளை பெறுவோரின் நன்மைகருதி தபால் திணைக்கள தபாலகங்கள் ஊடக மருந்துகள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தபால் திணைக்கள கடுகதி சேவையும் இடம்பெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மக்கள் முழுமையாக கடைப்பிடித்து வருகின்றனர். இன்று 21 காலையில் பிரதான நகரங்கள் உட்பட கரையோர பிரதேசங்களில் உள்ள முக்கிய கேந்திர ஸ்தானங்கள் மற்றும் வீதிகள் அனைத்தும் முற்றாக வெறிச்சோடி காணப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மதித்து மக்கள்  வீடுகளில் முடங்கி உள்ளதுடன் அத்தியவசிய சேவை வழமைபோன்று இயங்கிவருவதுடன் மருந்தகங்கள் திறந்துள்ளதை காண முடிகிறது. 

Related posts