போரதீவுப்பற்று களுவாஞ்சிக்குடிக்கான போக்குவரத்துச் பிரச்சனைக்கு தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான நவகிரிநகர் பிரதேசத்தில் நேற்று (19.01.2019) போக்குவரத்துச்சேவை மக்களின் நன்மை கருதி சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்டகால யுத்தத்தின்போது இப்பகுதிமக்கள் இடம்பெயந்து தற்பொழுது குடியமத்தப்பட்ட நிலையிலும் பாடசாலை மாணவர்கள் ஜந்து கிலோ மீற்றர் துரம் சென்று கல்வியினை கற்கவேண்யுள்ளதாலும் இப்பகுதி மக்கள் (20)கி.மீ தூரம் போக்குவரத்து செய்து தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியுள்ளதாலும் மக்கள் பெரும்; சிரமத்துக்குள்ளாக்கபடுகின்றனர். இதன் அடிப்படையில் மக்களினால் பிரதேச செயலாளரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்கவும் முன்னாள் பிரதி அமைச்சரும் ஐ.தே.கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் பணிப்புரைக்கமைவாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.டீ.விஜிதகமசேன அவர்களிடம் இப்பிரதேசத்தினை மையப்படுத்தி இம்மக்களுக்கான இச்சேவையினை வழங்கவேண்டும் என்பதற்கிணங்க போக்குவரத்து சபையினால் இன்று காலை 7.00 தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரையும் இரண்டு தடவைகள் போக்குவரத்து சேவை இடம்பொறும்.

இந்நிகழ்வின் போது முன்னாள் பிரதி அமைச்சரும் ஐ.தே.கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.டீ.விஜிதகமசேன கட்சியின் ஆதரவாளர்கள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் களுவாஞ்சிகுடி போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் திரு.பாஸ்கரன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts