மக்கள் நலன் காப்பகத்தின் அம்பாறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்திற்கான உணவுப் பொதிகள் அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட மக்கள் நலன் காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்றது இதன் போது கனடா நாட்டின் பொறியியலாளர் ஈஸ்வரப்பிள்ளை மகேந்திரநாதன் மக்கள் நலன் காப்பகத்தின் நடுவகப்பணியகத்தின் வடகிழக்கு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் அன்டனிப்பிள்ளை அன்டனி நிதித்துறைப் பொறுப்பாளர் பாலசுரேஸ் விதுரன் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் நான்காயிரம் ரூபா பெறுமதியான 50 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு மா சீனி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.