மக்கள் நலன் காப்பகத்தின் “ ஆதாரம் “ வாழ்வாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு
உதவித்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டம் இரத்தினபுரம் பகுதிக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வானது நேற்று நடைபெற்றது.
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வசிக்கும் திருமதி. தமிழ்ச்செல்வி திருச்செல்வம் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக குடிநீர் மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்காகவும் ஒரு இலட்சம் ( 100000/= ) ரூபாய் செலவில் குழாய்க் கிணறும் அதற்கான நீர் இறைக்கும் இயந்திரமும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் நலன் காப்பகத்தின் நிர்வாகத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி உதவித்திட்டத்திற்கு ஐக்கிய இராட்சியம் ஓர்பிங்ரன் பகுதியில் வசிக்கும் திருமதி. சிவபாக்கியம் விஸ்வலிங்கம் அவர்களும் அவரின் இரு மகன்களான திரு. புவனச்சந்திரன், திரு. புவனேந்திரன் ஆகியோரும் இணைந்து ஐம்பதாயிரம் ரூபாயும் காப்பகத்தின் பொதுநிதியில் முப்பத்தையாயிரம் ரூபாவும் கிணறு அடித்துக் கொடுக்கும் திரு. பின்ரன் (லதன்) அவர்கள் பதினையாயிரம் ரூபாயுடன் தனது சரீர ஒத்துழைப்புடன் கிணற்றையும் அமைத்துக்கொடுத்துள்ளார்கள்.
இவ் உதவித்திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்கிய திருமதி. சிவபாக்கியம், புவனச்சந்திரன். புவனேந்திரன். பின்ரன் ஆகியோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன் இது போன்று எமது தாயகத்தில் கடந்த கால யுத்தத்தினால் இன்னலுறும் மக்களுக்கு உதவிகளை செய்து கொடுக்க பணம் படைத்தவர்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.