மட்டக்கப்பு இளைஞர் யுவதிகளுக்கு தொழிழ்வாய்ப்பு வழங்க வேண்டும்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தொழில் வழங்குனர்களுக்கு மத்திய வங்கியின் வழிகாட்டுதலில் சலுகைக் கடன் வசதிகளை வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளார். இச்சலுகைக் கடன்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்கள் எமது மாவட்டத்தில் தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு நகரில் நவீன ஆடை விற்பனை நிலையமொன்றைத் திறந்து வைத்து சிறுப்புரையாற்றுகையில் தெரிவித்தார். 
 
நிலையத்தின் தலைவர் சபீக் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்புவிழா நிகழ்வில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நவீன ஆடையகமொன்று இங்கு திறந்து வைக்கப்படுவதன் மூலம் மாவட்ட மக்கள் தமது ஆடைத் தெரிவுகளை இலகுவாக தெரிவு செய்ய வாய்ப்பிருக்கின்றது. இந்த நல்ல முயற்சிக்கு நிருவாகத்தினரை வாழ்த்துவதுடன் மேலும் எதிர் காலத்தில் தொழில் விருத்தி ஏற்பட இறைவனைப் பிராத்திக்கின்றேன். இந்த ஆடையகத்தின் மூலம் இம்மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழிவாய்ப்பு வசதி கிடைப்பதும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்தார்.
 
இத்திறப்புவிழா நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எம். செல்வராசா, மட்;டக்களப்பு ஜமிஉஸ் ஸலாம் ஜூம்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத் தலைவர். எம். சியம், உட்பட வர்தகர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts