மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலையில் கொரோணா நோய் தொற்று ஏற்படுமாயின் 345, கிராமசேவையாளர் பிரிவுகளிலும் நோய் பரவும்!பா.அரியநேத்திரன். மு.பா.உ,

மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலையில் கொரோணா நோய் தொற்று ஏற்படுமாயின் 345, கிராமசேவையாளர் பிரிவுகளிலும் நோய் பரவும்!

 
பா.அரியநேத்திரன். மு.பா.உ,
 
மட்டக்களப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கொரோணா நோய் சிலருக்கு உள்ளதாக அறிய முடிகிறது அதன் தாக்கம் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14, பிரதேச செயலக பிரிவில் உள்ள 345, கிராமசேவையாளர் பிரிவுகளை சேர்ந்ந்த 1036, கிராமங்களுக்கும் பரவக்கூடும் இதனை எவரும் கணக்கெடுத்ததாக இல்லை என கவலை தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன்.
 
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோணா நோய் பரவல் அதிகரிப்பு்தொடர்பாக மேலும் கூறுகையில்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில்உள்ள பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் மயூரன், மட்டக்களப்பு மாவட்ட அனைத்து வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், சுகாதார துறை சார்ந்த அனைவரும் மிகவும் அற்பணிப்புடன் இரவு பகலாக சேவைபுரிகின்றனர் அவர்களின் பணியை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.
 
அவர்களுக்கு உதவியாக படையினரும், பொலிசாரும் பயணக்கட்டுப்பாடுகளை்நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி சேவை புரிகின்றனர்,
 
மாவட்ட அரச அதிகாரிகள், மாநகரசபை முதல்வர், நகரசபை, பிரதேச சபை்தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் அலுவலர்கள் தொண்டு நிறுவனங்கள் என பலதரப்பட்டவர்களின் கூட்டுச்செயல்பாடுகள் எல்லாம் அற்பணிப்பாக காணப்பட்டபோதும் அவர்களை மீறி சில விடயங்களை செய்ய முடியாது உள்ளதை்நாம் காணமுடிகின்றது.
 
முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பெரும் தொழில்சாலையாக அமைந்துள்ளது மண்முனை பற்று பிரதேச செயலகபிரிவில் ஆரையம்பதி கோயில்குளம் ஐந்தாம் கட்டை சந்தியில் அமைந்துள்ள தனியார் ஆடைத்தொழில்சாலை.
 
இங்கு சுமார் மூவாயிரத்துக்கு அதிகமான ஆண் பெண் தொழிலாளர்கள் கடமை புரிகின்றன் உண்மையில் இந்த ஆடை உற்பத்தி தொழில்லசாலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது பொருளாதார வாழ்வாதாரத்தை நம்பி சீவியம் நடத்துகின்றது அதில் மாற்றுக்கருத்துகள் இல்லை அது மட்டக்களப்பிற்கு ஒரு வரப்பிரசாரம் என்பது எவருக்கும் தெரிந்த ஒன்றே.
 
இந்த ஆடைத்தொழில்சாலயில் பணிபுரிகின்றவர்கள் மட்டக்களப்பு  படுவான்கரை பெருநிலம், எழுவான்கரைப்பகுதிளைசேர்ந்த 345, கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த 1036, கிராமங்களிலும் இருந்து வேலைக்கு்செல்கின்றனர். அவர்களுக்காக ஏறக்குறைய நூற்றுக்கு மேற்பட்ட பேரூந்துகள் தினமும் ஆடைத்தொழில்சாலை் நிர்வாகத்தால் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டும் உள்ளன.
 
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா மூன்றாவது அலை பரவலில் இந்த ஆடைத்தொழில் சாலையில் பணிபுரிந்த பலரும் நோய்தொற்று உறுதியாகி அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர்களின் குடும்ப உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
 
நாளாந்த புள்ளி விபரப்படி இந்த ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்கள் ஓரிருவருக்கு்கொரோணா தொற்று அடையாளம் காணப்படுவதாக தெரிகிறது.
 
இந்த நிலை தொடருமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல கிரமசேவையாளர் பிரிவுகளும் பெரும் பாதிப்புக்களை எதிர்தோக்கவேண்டியநிலை ஏற்படும்.
 
இதனை சம்மந்தப்பட்ட மாவட்ட அரச அதிபர் மற்றும் கவரோணா தடுப்பு செயலணி மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து குறைந்தது மூன்று வாரங்களுக்காவது மட்டக்களப்பு ஆடைத்தொழில்சாலையை இயங்காமல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
அப்படி செய்யத்தவறும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல கிராமங்களிலும் கொரோணா நோய் பரவலுக்கு தாமே காரணம் என்பதை ஏற்க வேண்டியநிலை உண்டாகும் என மேலும் கூறினார்.

Related posts