மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலையில் இன்று சனிக்கிழமை (24.11.2018)காலை 7.26 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஐ.பீ.சரச்சந்திர தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்ஸே இவ்வாறு வீதியில் உள்ள புளியமரத்திலும்,கடையிலும் மோதுண்டுள்ளது.
அக்கறைப்பற்றிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி புறப்படுகையிலே(கல்முனை -மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது)எதிரே மோட்டார்சைக்கிளில் பயணித்த மீன்வியாபாரி வலப்பக்கம் திரும்புவதற்கான சமிஞ்ஞை போடாமலும்,திடிரெண்டு குறுகிய தூரத்துக்குள் திரும்பியதாலும் ,பஸ்சாரதி கட்டுப்படுத்த முடியாமலும் பஸ்ஸைக் கொண்டு வீதியில் உள்ள மரத்திலும்,கடையிலும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.இது இலங்கை போக்குவரத்து சாரதியின் கவனக்குறைவல்ல.எதிரே மோட்டார் சைக்கிளில் சென்ற மீன் வியாபாரியின் கவனக்குறைவே ஆகும் என வீதியில் சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள்,பயணிகள் குறிப்பிடுகின்றார்கள்.
இதனால் இலங்கை போக்குவரத்துச்சபைக்கான பஸ்,மீன் வியாபாரியின் உடமைகள்,கடைகள் சேதமடைந்துள்ளது.அம்பாறை நகரைச்சேர்ந்த பஸ்சாரதியான ஜே.ஆர்.ஜெயலத்(வயது-50),மற்றும் மீன் வியாபாரியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.