மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு மாநகர சபையின் பங்களிப்புடன் மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்தினை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தகாரர்களுடனான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு  (17) பிற்பகல் மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு, தனியார் பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்தும் திட்டத்தின் இவ்வருடத்தின் முதல்கட்ட நிர்மான பணிக்காக 40 பில்லியனும்  எதிர்வரும் ஆண்டில் 20 பில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டு , சுமார் 60 பில்லியன் ரூபாய் செலவில், இத்தனியார் பஸ் தரிப்பிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிர்மான  பணிகளுக்காக ஒப்பந்தகாரர்களுடனான கைசாத்திடும் நிகழ்வில், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் கே.சத்தியசீலன், மாநகர பொறியியலாளர், மாநகர உறுப்பினர்கள், தனியார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related posts