ஊடகங்களுக்கு (27)கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 ஆண்டுகளாக ஒரு தேசிய கட்சியில் தமிழன் ஒருவரை அமைச்சராக உருவாக்க முடியாமல் நாங்கள் இன்று தத்தளிக்கின்றோம்.தேசிய கட்சியில் தமிழ் அமைச்சர் ஒருவரை உருவாக்க முடியாமல் தமிழ்மக்கள் அபிவிருத்தியில் பல பின்னடைவுகளை சந்தித்து வருகின்றோம்.இதற்கு காரணம் தமிழ்மக்கள் அரசியல் சார்ந்து தூரநோக்குடன் சிந்திக்காததுதான் ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இலட்சத்து ஒன்பதாயிரம் வாக்குகளை வைத்திருக்கும் தமிழ்மக்கள் ஒரு தமிழனை அமைச்சரை உருவாக்க முடியாமல் உள்ளோம்.எம்மாவட்டத்தில் 90,000 வாக்குகளை வைத்திருக்கும் சகோதர முஸ்லிம் மக்கள் மூன்று அமைச்சர்களை கடந்த காலங்களில் கொண்டு வந்திருக்கின்றார்கள்.ஏறாவூருக்
மட்டக்களப்பில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த 40,000 குடும்பங்கள் நிரந்தர பொருளாதாரம் இன்றி தத்தளிக்கின்றார்கள்.இவர்களுக்
எமது கட்சியின் தலைவர் சஜித் பிரமதாச வறுமையை நாட்டிலே ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.எமது மாவட்டத்தில் சஜித் பிரமதாசவினால் இதுவரையும் 4500 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார்.இன்னும் 1250 வீடுகள் முற்றுப்பெறாமல் இருக்கின்றது.இதனை மீள ஆரம்பிப்பதற்கு மட்டக்களப்பு மக்கள் ரெலிபோன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.சஜித் பிரமதாச ஆட்சிக்கு வந்தால் மட்டக்களப்பில் “அனைவருக்கும் நிழல்” திட்டத்தினால் 20,000 வீடுகளை கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
எமது மாட்டத்தில் 50,000 இளைஞர்,யுவதிகள் வேலைவாய்பில்லாமல் இருக்கின்றார்கள்.சஜித் ஆட்சி வந்தால் இவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும்.இன்னும் மாவட்ட தமிழ்மக்கள் ஏமாறவேண்டாம்.சுமார் 5 ஆண்டுகளாக எமது மாவட்டத்தில் வாழ்வாதாரம்,வீதி அபிவிருத்தி,போன்றன கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்பட்டுள்ளது.இந்த மாவட்டத்தில் 550 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தையல் பயிற்ச்சி வழங்கி சுயவருமானத்தை நான் ஈட்டிக்கொடுத்துள்ளேன்.ஏமாற்று அரசியலில் இருந்து தமிழ்மக்கள் விடுபட்டால் மட்டக்களப்பில் தமிழ்மக்களின் தேவைகளை பூர்த்தி செயப்படும் எனத் தெரிவித்தார்.