ஒவ்வொரு அமைப்புக்கும் கிராமிய மட்டம்,பிரதேச மட்டம், தொகுதி மட்டம்,மாவட்ட மட்டம் எனும் அடிப்படையில் ஆற்றலும்,திறமையும்,துடிப்பும்,
இதன்படி ஸ்ரீ லங்கா பொதுஜன இளைஞர் முன்னணி,ஸ்ரீ லங்கா பொதுஜன மகளிர் முன்னணி,ஸ்ரீ லங்கா பொதுஜன மதகுருமார் முன்னணி,ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவைச்சங்கம்,ஸ்ரீ லங்கா பொதுஜன விவசாயிகள் முன்னணி,ஸ்ரீ லங்கா பொதுஜன மீனவர் முன்னணி,முற்போக்கு அரச சேவை தொழிற்சங்க சம்மேளனம், வணிக கைத்தொழில் மற்றும் சேவைகள் முன்போக்கு சேவையாளர் சங்கம்,ஸ்ரீ லங்கா பொதுஜன மாற்றுத்திறனாளிகள் சங்கம்,ஸ்ரீ லங்கா பொதுஜன போக்குவரத்து சேவையாளர் சங்கம்,ஸ்ரீ லங்கா பொதுஜன உள்ளுராட்சி சேவையாளர் சங்கம்,ஸ்ரீ லங்கா பொதுஜன முன்பள்ளி ஆசிரியர் சங்கம்,ஸ்ரீ லங்கா பொதுஜன சட்டத்தரணிகள் சங்கம்,ஸ்ரீ லங்கா பொதுஜன பொறியியளாளர் முன்னணி,ஸ்ரீ லங்கா பொதுஜன பட்டதாரிகள் முன்னணி,ஸ்ரீ லங்கா பொதுஜன வைத்தியர்கள் சங்கம் போன்ற அமைப்புக்களை மாவட்டத்தில் உருவாக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக்கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும்,சகல அமைப்புக்ளினதும் உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக்கட்சியினால் நியமிக்கப்பட்ட ஒரே ஒரு வேட்பாளரான ப.சந்திரகுமார் அவர்களின் விருப்பு இலக்கம் 4 க்கும், கட்சியின் சின்னத்திற்கும் எதிரே புள்ளடியிட்டு வெற்றி பெறச் செய்து அமைச்சராக்குவதன் மூலம் எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனும் உன்னத எதிர்பார்ப்புகளுடன் இரவு பகல் பாராது கட்சியின் கொள்கையின்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக கட்சியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது