மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (06) காலை வரை 2244 குடும்பங்களைச் சேர்ந்த 5764 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே இத்தொகையானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா நோயளர்களுடனான நேரடித் தொடர்புடையவர்கள், அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்தவர்கள் மற்றும் ஏனைகாரணங்களுக்காகவே இத்தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கூடுதல் தொகையான 376 குடும்பங்களைச் சேர்ந்த 1335 பேரும், மன்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த தொகையான 67 குடும்பங்களைச்சேர்த 276 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்த நாட்களை விட அதிகரித்துக் காணப்படுகின்றது.
மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள வழைச்சேனை பொலிஸ் பிரிவிலான கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 348 நபர்களும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 209 குடும்பங்களைச் சேர்ந்த 749 நபர்களும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 353 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்ட வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 173 குடும்பங்களைச் சேர்ந்த 684 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 556 நபர்களும், களுவாஞ்சிக்கடி பிரதேச செயலாளர் பிரிவில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 136 நபர்களும், காத்தான்கடி பிரதேச செயலாளர் பிரிவில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 386 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 109 குடும்பங்களைச் சேர்ந்த 127 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு ள்ளனர்.
இவற்றுக்கு மேலதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 208 குடும்பங்களைச் சேர்ந்த 224 நபர்களும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 242 குடும்பங்களைச் சேர்ந்த 242 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 242 நபர்களும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 106 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இனிவருங்காலங்களில் எந்தஒரு வெளிமாவட்டங்களில் இருந்து இம்மாவட்டத்திற்கு வரும் எந்தஒரு நபரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.