மட்டக்களப்பு மாவட்டத்தில்யானைகளுக்கான தடுப்பு வேலிகள் அமைக்கும் வேலைத் திட்டம் ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தவருடத்திற்குள் 107.5 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை தடுப்பு வேலிகள் அமைத்து யானைகள்  கிராமங்களுக்குள் வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்
தெரிவித்துள்ளார்.
 
இதன் முதற்கட்டமாக வனஜீவராசிகள்திணைக்களம் கிரான், வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளில்இந்த வேலிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் கிரான் பிரதேசத்தில் 73 கிலோமீட்டர் தூரவேலியும், வாகரை பிரதேசத்தில் 18.5 கிலோமீட்டர் தூர வேலியும், செங்கலடி பிரதேசத்தில் 16 கிலோமீட்டர் தூர வேலியும்
அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
 
மொத்தத்தில் 83 கிலோமீட்டர் தூர
வேலைகளுக்கான கேள்வி கோரப்பட்டு உரிய ஒப்பந்தக்காரர்களிடம் வேலைகள்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் அதனை பூர்த்தி செய்யநடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Related posts