மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சிசிச்சை பலனின்றி உயிரிழப்பு.
வாகன விபத்தில் சிக்குண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவந்த வாகரை பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சிசிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை(8)இரவு 10.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்தில் பொருளாதா உத்தியோகஸ்தராக கடமையாற்றிய ஜெகநாதன்-காண்டீபன்(வயது-44)கடந்
இவ்வாறு உயிரிழந்துள்ள குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,மட்டக்களப்பு ஆரையம்பதியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.மட்டக்களப்பு செங்கலடி,மற்றும் வவுணதீவு பிரதேச செயலகங்களில் கடமையாற்றியுள்ளார்.அரச திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒரு வளவாளராகவும் செயற்படதோடு,இசைத்துறையில் ஒரு கலைஞராகவும் இருந்து பல நிகழ்வுகளில் தமது ஆளுமையையும்,கலையையும் வளர்த்த இளம் கலைஞரும் ஆவார்.இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையே ஆவார்.இவ்விபத்து சம்பந்தமாக வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.