மட்டக்ளப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு டிஜிடல் கொடுப்பணவுமுறையூடன சந்தை வாய்ப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு டிஜிடல் கொடுப்பனவு முறையுடனான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் வழிகாட்டலில் இம்முறை நத்தார் பண்டிகையினை முன்னிட்டு இச்சந்தை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் அபாயம் நிலவும் இச்சந்தர்ப்பத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கல் வாங்கள்களை மேற்கொள்ளும் விதமாக இந்நத்தார் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஹட்டன் நசனல் வங்கி அறிமுகம் செய்திருக்கின்ற விசேட செயலியான “சோலோ” தொடுகை முறையற்ற கொடுக்கல் வாங்கல் செயற்பாட்டினூடான பணப்பரிமாற்ற சேவையினை பயன்படுத்தி இந்நத்தார் சந்தை விசேடமாக சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்காக நாளை (18) காலை 9.00 மணிமுதல் கி.க. 6.00 மணிவரை மட்டக்களப்பு அமேரிக்கன் மிசன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்நிகழ்வினை ஹட்டன் நெசனல் வங்கி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
 
 
இந்நிகழ்வின்போது தொடுகையற்ற பணப்பரிமாற்ற சேவை உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன், உற்பத்தியாளர்களின் பொருட்களும் சந்தைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts