மட்டு.செங்கலடியில் பெண்கள் மற்றும் சிறுமியர் துஸ்பிரயோகத்திற்கெதிரான விழிப்புணர்வு போராட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் பெண்கள் சிறுமியர் துஸ்பிரயோகத்திற்கெதிரான விழிப்பூட்டும்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (13) மட்டக்களப்பில்  முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செங்கலடி பிரதான வீதி சந்தியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களை பிரநிதிப்படுத்தும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வு சுமார் 45 நிமிடம் இடம்பெற்றது.

“பெண்பிள்ளைகளை விற்பனை பண்டமாக்காதே, “பெண் பிள்ளைகளை மதி!!! அது உன் தாய்மை” , சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யாதே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க உதவுங்கள், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுலோக அட்டைகளை தாங்கியவாறு தமது எதிர்ப்பை தெரிவித்தும், இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.

இன்றைய கொரோனா சூழ்நிலையிலும் பாலியல் ரீதியாக பெண்கள்,சிறுவர்கள்  துன்புறுத்தப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தீர்வு நீதியாக கிடைக்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இந்த கவனயீர்ப்பினைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.

Related posts