மட்டக்களப்பு தாதிய கல்லூரி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நவராத்திரி விழாவினை நிறுத்தியதாகக் கூறி போதனாசிரியருக்கு எதிராக 18 கல்லூரி மாணவர்களினால் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போதனாசிரியர் அவர்கள் பலகாலங்களாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு இடையூறாக இருந்துவந்ததாகவும் மாணவர்கள் கவலைதெரிவித்துள்ளனர். எமது நாட்டிலுள்ள பெரும்பாலான பிரதேசங்களிலிருந்தும் வருகின்ற மூவின இனத்தைச் சேர்ந்த மாணவர்களே மட்டக்களப்பு தாதிய கல்லூரியில் கல்வி பயின்று வருகினற்ற வேளையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினை சீர்குலைக்கும் வகையில் இவர் நடந்து கொண்டிருப்பது தண்டிக்கப்படவேண்டிய ஒரு விடயம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் பல மாணவர்கள் போதனாசிரியர் அவர்களின் வைப்புறுத்தலுக்கிணங்க கற்றல் அறைகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் தனது கட்டுப்பாட்டின் செயற்படமுடியாதாவர்களை அவர்களின் :தேர்வுப்பரீட்சைகளில் சித்தியடைய விடமாட்டேன் என்றும் வைப்புறுத்தி வந்ததாகவும் இதேபோன்று அனைத்து மாணவர்களும் பல பிரச்சனைகளை நீண்ட நாட்களாக இவர் ஏற்படுத்தியதாக மாணவர்கள் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.
எமது நாட்டிலுள்ள அனைவருக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு உரிமைகள் உண்டு அதேபோன்று அன்றைய தினம் உலக இந்துக்களால் வருடாவருடம் நடாத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றே நவராத்திரி விழா இந்த விழாவினையும் இந்துக்களின் மதவழிபாட்டினையும் அவமதித்து கொச்சைப்படுத்தி தகாத வார்த்தைகளால் போதானாசிரியர் அவர்கள் பேசியமை மிகவும் மனவேதனையை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இனிவரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் எமது நாட்டில் எந்தப்பிரதேசங்களிலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் .தங்கள் ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.